வணிகம்

சென்செக்ஸ் சரிவு: 17,500 புள்ளிகளைக் கடந்தது நிஃப்டி

10th Aug 2022 04:18 PM

ADVERTISEMENT

 

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் சரிவுடன் முடிவடைந்த நிலையில், நிஃப்டி சற்று ஏற்றம் கண்டு 17,500 புள்ளிகளைக் கடந்தது.

வாரத்தின் மூன்றாம் நாளான இன்று, வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 35.78 புள்ளிகள் சரிந்து 58,817.29 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.061 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9.65 புள்ளிகள் சரிந்து 17,534.75 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.055 சதவிகிதம் உயர்வாகும். 

ADVERTISEMENT

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 14 நிறுவனங்களில் பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. அதிகபட்சமாக டாடா ஸ்டீல் 1.91 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 1.50 சதவிகிதமும், ஐசிஐசிஐ வங்கி 1.45 சதவிகிதமும், எல்&டி 1.38 சதவிகிதமும், இந்தஸ்இந்த் 1.09 சதவிகிதமும் உயர்ந்திருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT