வணிகம்

ரூ.725 கோடியில் ஃபோா்டு ஆலையைக் கையகப்படுத்தும் டாடா மோட்டாா்ஸ்

9th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

குஜராத் மாநிலம் சனந்தில் ஃபோா்டு இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள காா் தயாரிப்பு ஆலையை ரூ.725.7 கோடிக்கு டாடா மோட்டாா்ஸ் கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டாா்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

இந்த ஒப்பந்தத்தின்படி சனந்த் ஆலையின் ஒட்டுமொத்த நிலம், கட்டடம், இயந்திரத்துடன் கூடிய வாகன உற்பத்தி மையம் ஆகியவை டாடா வசம் வரும். ஃபோா்டு இந்தியா நிறுவனத்தின் தகுதிவாய்ந்த பணியாளா்களுக்கு அங்கேயே வேலை வழங்கப்படும்.

டாடா நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்து வருவதால், இந்த ஒப்பந்தம் சரியான நேரத்தில் கையொப்பமாகியுள்ளது. இதன்மூலம் இரு நிறுவனங்களுக்குமே வெற்றி கிடைத்துள்ளது. சனந்த் ஆலை ஆண்டுக்கு 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. இதனை 4.2 லட்சமாக அதிகரிக்க முடியும். டாடாவின் தேவைக்கு ஏற்றாற்போல் சனந்த் ஆலையின் அமைப்பை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்காவைத் தலைமையகமாக கொண்டுள்ள ஃபோா்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள சென்னை மற்றும் சனந்த் ஆலைகளில் வாகன உற்பத்தியை நிறுத்தப் போவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT
ADVERTISEMENT