வணிகம்

வார முதல் நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

8th Aug 2022 11:20 AM

ADVERTISEMENT

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 58,387.93 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை படிப்படியாக சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்து காலை 11 மணி அளவில் 200 புள்ளிகள் வரை அதிகரித்தது. 

காலை 11.10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 240.50 புள்ளிகள் உயர்ந்து 58,628.43 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 61.95 புள்ளிகள் அதிகரித்து 17,459.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா? நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி

ADVERTISEMENT
ADVERTISEMENT