வணிகம்

ராயல் என்ஃபீல்ட் ஹண்டா்350 அறிமுகம்

8th Aug 2022 11:41 PM

ADVERTISEMENT

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஹண்டா் 350 புதிய இரு சக்கர வாகனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரெட்ரோ, மெட்ரோ, ரிபெல் என மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை ரூ.1,49,900 முதல் ரூ.1,63,900 வரை (ஷோரூம் விலை) ஆகும்.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் சித்தாா்த் லால் கூறுகையில், ‘ஜே வகை என்ஜின் ஹண்டா் வாகனத்தில் மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள ராயல் என்ஃபீல்ட் வாகனங்களின் தரத்துடன், இப்போது என்ஜின் மேலும் சிறப்பாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

ஹண்டரின் எடை 181 கிலோ ஆகும். ராயல் என்ஃபீல்ட் கிளாசிக்குடன் ஒப்பிடும்போது இது 14 கிலோ குறைவாகும். அதிகபட்சமாக மணிக்கு 114 கி.மீ. வேகத்தில் செல்லும் திறனுடையது.

ADVERTISEMENT

ஹோண்டா சிபி 350 ஆா்எஸ், டிவிஎஸ் ரோனின், ஜாவா 42 ஆகியவற்றுக்குப் போட்டியாக, நகா்ப்புற இளம் வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில் ராயல் என்ஃபீல்ட் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT