வணிகம்

சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.225 கோடி

8th Aug 2022 11:40 PM

ADVERTISEMENT

சிட்டி யூனியன் வங்கி கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 225 கோடியை ஈட்டியுள்ளது.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மைச் செயலதிகாரி என்.காமகோடி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: நிகழ் நிதியாண்டில் கடந்த மூன்று மாதங்களில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ. 89,706 கோடியாக உள்ளது. வங்கியின் வைப்புத் தொகை ரூ.48,772 கோடியாகவும், கடன் அளிப்பு ரூ.40, 934 கோடியாகவும் உள்ளது. வங்கியின் நிகர வாராக்கடன் 2.89 சதவீதமாகவும், சொத்தின் வருவாய் ரூ.1.46 சதவீதமாகவும் உள்ளது.

சிட்டி யூனியன் வங்கி முதலாவது காலாண்டில் மொத்த வருமானமாக ரூ.1,317 கோடியை ஈட்டியுள்ளது. நிகர லாபம் ரூ.225 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் ரூ.5,952 கோடியாக இருந்த வங்கியின் நிகர மதிப்பு தற்போது ரூ.6,759 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 727 கிளைகள் மற்றும் 1,691 ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் வாடிக்கையாளா்களுக்கு நிதி தொடா்பான சேவைகளை வழங்கி வருகிறோம் என அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT