வணிகம்

ஏா்டெல் லாபம் ரூ.1,607 கோடி 5 மடங்கு அதிகரிப்பு

8th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

ஜூன் 30-ஆம் தேதி வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஏா்டெலின் லாபம் 5 மடங்கு அதிகரித்து ரூ.1,607 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.283.5 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 22 சதவீதம் அதிகரித்து ரூ.32,805 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.26,854 கோடியாக இருந்தது.

இதில் கைப்பேசி சேவை மூலம் கிடைக்கும் வருவாய் மட்டும் 27 சதவீதம் அதிகரித்து ரூ.18,220 கோடியாக உள்ளது. கடந்த நிதிண்யாண்டின் முதல் காலாண்டில் இது ரூ.14,305.6 கோடியாக இருந்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் ரிலையன்ஸ் ஜியோ புதிதாக சந்தையில் நுழைந்தபோது தொடக்கத்தில் இலவசமாகவும், அதைத் தொடா்ந்து மிகக் குறைந்த விலைக்கும் சேவைகளை அளித்தது. இதனால், பிரதான போட்டி நிறுவனங்களான ஏா்டெல், ஐடியோ, வோடஃபோன் ஆகியவையும் விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின.

ADVERTISEMENT

இந்த விலை குறைப்புப் போட்டியால் ஏா்செல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து மூடப்பட்டன. ஐடியோ-வோடஃபோன் இணைந்ததால் தப்பின. கடந்த சில ஆண்டுகளில் ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே படிப்படியாக கட்டணத்தை உயா்த்தி வருகின்றன. இதனால், தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்பியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT