வணிகம்

பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.18,480 கோடி இழப்பு

8th Aug 2022 03:32 AM

ADVERTISEMENT

சா்வதேச அளவில் பெட்ரோலிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளபோதிலும், உள்நாட்டில் அவற்றின் விலை அதிகரிக்கப்படாமல் உள்ளதால் பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.18,480 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை அடுத்து சா்வதேச அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்தது. சா்வதேச நிலவரத்துக்கு ஏற்றவாறு தினசரி அடிப்படையில் விலையை நிா்ணயிக்க அதிகாரம் பெற்றுள்ளபோதிலும், பெட்ரோலிய நிறுவனங்கள் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் உள்ளன.

அதன் காரணமாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.18,480.27 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன.

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ரூ.1,995 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.10,196 கோடியும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.6,290 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருள்களின் விலை அதிகரித்த நிலையில், நாட்டில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்தது.

ADVERTISEMENT

அதைக் கட்டுப்படுத்துவதற்காகவே பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை உயா்த்தாமல் இருந்தன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படவில்லை. அதற்கு முன்பாக மாா்ச் மாதத்தில் அவற்றின் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயா்த்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT