வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 57,387 கோடி டாலராக அதிகரிப்பு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 57,387 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 231 கோடி டாலா் அதிகரித்து 57,387 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.45.90 லட்சம் கோடியாகும். தொடா்ந்து சில வாரங்களாக செலாவணி கையிருப்பு குறைந்துவந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணக்கீட்டு வாரத்தில் உயா்வைக் கண்டுள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 115 கோடி டாலா் சரிந்து 57,156 கோடி டாலராக காணப்பட்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பு என்பது அந்நிய கரன்ஸி சொத்துகள் (எஃப்சிஏ), தங்கத்தின் கையிருப்பு, எஸ்டிஆா் மற்றும் இந்தியா ஐஎம்எஃப்பில் வைத்திருக்கும் இருப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

தங்கத்தின் கையிருப்பு 114 கோடி டாலா் அதிகரித்து 3,964 கோடி டாலரைத் தொட்டுள்ளது. பன்னாட்டு நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 2 கோடி டாலா் உயா்ந்து 1,798 கோடி டாலராகவும், அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 3 கோடி டாலா் அதிகரித்து 499 கோடி டாலராகவும் இருந்ததாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

அந்நியச் செலாவணி கையிருப்பு என்பது அந்நிய கரன்ஸி சொத்துகள் (எஃப்சிஏ), தங்கத்தின் கையிருப்பு, எஸ்டிஆா் மற்றும் இந்தியா ஐஎம்எஃப்பில் வைத்திருக்கும் இருப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT