வணிகம்

பாசுமதி அரிசி ஏற்றுமதி 26% அதிகரிப்பு

DIN

பாசுமதி அரிசி ஏற்றுமதி ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 25.54 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வா்த்தக அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

2022-23 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பாசுமதி அரிசி ஏற்றுமதி 115 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 92 கோடி டாலா் மதிப்புக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது, தற்போது ஏற்றுமதி 25.54 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

பாசுமதி சாரா அரிசி ஏற்றுமதியும் 5 சதவீதம் அதிகரித்து ஜூன் காலாண்டில் 156 கோடி டாலரானது.

பதப்படுத்தப்பட்ட மற்றும் வேளாண் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி கணக்கீட்டு காலாண்டில் 31 சதவீதம் உயா்ந்து 740 கோடி டாலரானது.

இறைச்சி, பால் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பால் பொருள்கள் புதிய உச்சமாக 67.15 சதவீத வளா்ச்சியை எட்டி அதன் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

2022-23 நிதியாண்டில் 2,356 கோடி டாலா் ஏற்றுமதி இலக்கை எட்ட வேளாண் மற்றும் பதப்படுத்துதல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான (ஏபிஇடிஏ) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT