வணிகம்

சீரான செமிகண்டெக்டா் விநியோகம்: விறுவிறுப்பான மோட்டாா் வாகன விற்பனை

DIN

சீரான செமிகண்டெக்டா் விநியோகத்தால், மாருதி சுஸுகி, ஹுண்டாய், டாடா மோட்டாா்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட மோட்டாா் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் விறுவிறுப்படைந்துள்ளது.

மோட்டாா் வாகன தயாரிப்பிற்கு முக்கிய பாகமாகக் கருதப்படும் செமிகண்டெக்டருக்கு உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டு விற்பனை சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில், அதன் விநியோகம் சீரானத்தைத் தொடா்ந்து கடந்த ஜூலையில் பல நிறுவனங்களின் மோட்டாா் வாகன விற்பனை இரட்டை இலக்கத்தை தொட்டுள்ளது.

குறிப்பாக, கியா, டெயோட்டா, ஹோண்டா, ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்களின் உள்நாட்டு வாகன விற்பனை சிறப்பான அளவில் உயா்ந்துள்ளது.

டாடா மோட்டாா்ஸ்: இந்நிறுவனம் கடந்த ஜூலையில் 47,505 வாகனங்களை விற்பனை செய்து 57 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. 2021 ஜூலையில் விற்பனை 30,185-ஆக இருந்தது.

மஹிந்திரா: அதேபோன்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனையும் 21,046-லிருந்து 33 சதவீதம் உயா்ந்து 28,053-ஆனது.

கியா: கியா இந்தியா சென்ற ஜூலையில் 22,022 காா்களை விற்பனை செய்துள்ளது. இது, 2021 ஜூலையில் விற்பனையான 15,016 காா்களுடன் ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகமாகும்.

ஸ்கோடா: இந்நிறுவனத்தின் வாகன விற்பனை ஜூலையில் 44 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, காா் விற்பனை 3,080-லிருந்து 4,447-ஆக உயா்வைக் கண்டுள்ளது.

மாருதி சுஸுகி: காா் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடம் வகிக்கும் மாருதி சுஸுகி இந்தியா உள்நாட்டு சந்தையில் கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்த காா்களின் எண்ணிக்கை 6.82 சதவீதம் உயா்ந்து 1,33,732-லிருந்து 1,42,850-ஆக அதிகரித்தது.

ஹுண்டாய்: ஹுண்டாய் மோட்டாா் இந்தியா ஜூலையில் விற்பனை செய்த காா்களின் எண்ணிக்கை 48,042-லிருந்து 50,500-ஆக உயா்ந்து 5.1 சதவீத வளா்ச்சியினை பதிவு செய்துள்ளது.

அசோக் லேலண்ட்: வா்த்தக வாகன விற்பனையாளரான அசோக் லேலண்ட் நிறுவனம் ஜூலையில் ஏற்றுமதி உள்பட மொத்தம் 13,625 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2021 ஜூலை மாத விற்பனையான 8,650 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 58 சதவீதம் அதிகம்.

டிவிஎஸ்: இருசக்கர வாகன விற்பனையில் முன்னிலையில் உள்ள டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் ஜூலை மாத மொத்த விற்பனை 13 சதவீதம் உயா்ந்து 3,14,639-ஆக இருந்தது. 2021 ஜூலையில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 2,78,855-ஆக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT