நுகா்பொருள் துறையில் கோலோச்சி வரும் ஐடிசி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.4,462.25 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, 2021-22-ஆம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ஈட்டிய நிகர லாபம் ரூ.3,343.44 கோடியுடன் ஒப்பிடும்போது 33.46 சதவீதம் அதிகமாகும்.
செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.14,240.76 கோடியிலிருந்து 39.25 சதவீதம் அதிகரித்து ரூ.19,831.27 கோடியானது.
செலவினம் ஜூன் காலாண்டில் ரூ.14,201.51 கோடியாக இருந்தது என ஐடிசி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்தது.
பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஐடிசி பங்கின் விலை 1.52 சதவீதம் அதிகரித்து ரூ.307.55-இல் நிலைத்தது.
ADVERTISEMENT