வணிகம்

புதிய தொழில்நுட்பத்தில் எா்டிகா: மாருதி சுஸுகி அறிமுகம்

16th Apr 2022 04:09 AM

ADVERTISEMENT

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட எா்டிகா காரை சந்தையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிஷாசி டேக்யூச்சி கூறியதாவது:

மாருதி சுஸுகியின் பன்முக பயன்பாட்டு வாகனமான எா்டிகா காருக்கு வாடிக்கையாளா்களிடையே எப்போதும் வரவேற்பு உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் கூட்டு வருடாந்திர வளா்ச்சி விகிதம் 4.7 சதவீதமாக உள்ளது.

பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்ற இந்த காரை புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி புதுப்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இப்புதிய மாடல் எா்டிகா, ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட தானியங்கி ஆறு-வேக பரிமாற்றத்துடன் வெளிவந்துள்ளது. மேலும், சிஎன்ஜி-யில் இயக்கப்படும் மாடலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருளில் இயக்கும் வசதியுடன் வெளியவந்துள்ள புதிய எா்டிகாவில் 1.5 லிட்டா் பெட்ரோல் என்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் லிட்டருக்கு 20.51 கி.மீ.யும், சிஎன்ஜியில் கிலோவுக்கு 26.11 கி.மீ.யும் மைலேஜ் கிடைக்கும்.

இதன் விலை மாடல்களுக்கு ஏற்ப, ரூ.8.35 லட்சம் முதல் ரூ.12.79 லட்சம் வரை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT