வணிகம்

பெப்பிளின் புதிய ஸ்மார்ட் வாட்சுகள் அறிமுகம்

12th Apr 2022 12:56 PM

ADVERTISEMENT

இந்தியாவில் பெப்பிள் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்சுகள் திங்கள்கிழமை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெப்பிள் காஸ்மோ ப்ரோ எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு வாட்சுகளிலும் ஆக்ஸிஜன் அளவு மற்றும் இதய துடிப்பை கணக்கீடு செய்யப்படும் தொழில்நுட்பம் உள்ளன. மேலும், போன் செய்யும் வசதிகளுடன் மைக் பொருத்தப்பட்ட இந்த வாட்சுக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 நாள்கள் உபயோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.7 இன்ச் எச்டி டிஸ்பிளே கொண்ட இந்த வாட்சானது, அமேசான் மற்றும் பெப்பிள் இணையதளத்தில் ரூ. 3,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த புதிய வாட்சுகள் குறித்து பெப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் கோமல் அகர்வால் கூறியதாவது:

ADVERTISEMENT

எங்கள் வாடிக்கையாளர்களின் பல விதமான தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியாக இந்த இரு வாட்சுகளையும் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT