வணிகம்

இந்தியாவில் உற்பத்தியாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 13-ன் சிறப்பம்சம்

12th Apr 2022 04:25 PM

ADVERTISEMENT

 

ஐபோன் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியிருப்பதாக ஆப்பிள் உறுதி செய்துள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் ஐபோன் 13 உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோ்த்தியான வடிவமைப்பு, அதிநவீன கேமரா அமைப்பில் திகைப்பூட்டும் போட்டோ-விடியோக்கள், ஏ15 பயோனிக் சிப்பின் அளவில்லா செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ஐபோன் 13 தயாரிப்பை உள்ளூா் வாடிக்கையாளா்களுக்காக இந்தியாவில் தயாரிக்க தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஐபோன் எஸ்இ மாடலுடன் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் செல்லிடப்பேசி உற்பத்தியை கடந்த 2017-இல் தொடக்கியது. பிறகு, ஐபோன்11, ஐபோன் 12, தற்போது ஐபோன் 13 உள்ளிட்ட அதிநவீன மேம்பட்ட மாடல்களை ஆப்பிள் தயாரித்து வருகிறது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT