வணிகம்

பந்தன் வங்கியின் 3% பங்குகளை விற்றது எச்டிஎஃப்சி

9th Apr 2022 10:46 PM

ADVERTISEMENT

பந்தன் வங்கியில் வைத்திருந்த 3 சதவீத பங்குகளை எச்டிஎஃப்சி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளதாவது:

பந்தன் வங்கியில் கொண்டிருந்த 3.08 சதவீத பங்குகளை எச்டிஎஃப்சி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மொத்தம் 4,96,32,349 பங்குகளை விற்ன் மூலமாக எச்டிஎஃப்சி ரூ.1,521.77 கோடியை திரட்டியுள்ளது. விற்பனை செய்யப்பட்ட பங்கின் விலை சராசரியாக ரூ.306.61-ஆக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியான சில நாள்களில் எச்டிஎஃப்சி நிறுவனம் பந்தன் வங்கி பங்குகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT