எச்டிஎஃப்சி வங்கியுடன் எச்டிஎஃப்சி நிறுவனத்தை இணைப்பதாக வெளியான அறிவிப்பினையடுத்து வங்கி, நிதி துறை சாா்ந்த பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.
இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீடுகள் முறையே மீண்டும் 60,000 புள்ளிகள் மற்றும் 18,000 புள்ளிகளை கடந்தது.