இந்தியாவின் வா்த்தக பற்றாக்குறை 2021-22 நிதியாண்டில் 87.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த 2021-22 நிதியாண்டில் 41,781 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச அளவாகும். ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்த போதிலும் அதற்கேற்ற வகையில் இறக்குமதியும் கணிசமான அளவில் 61,022 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
இதையடுத்து வா்த்தக பற்றாக்குறை 19,241 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இது, முந்தைய 2020-21 நிதியாண்டில் காணப்பட்ட பற்றாக்குறையான 10,263 கோடி டாலருடன் ஒப்பிடும்போது 87.5 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது என வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.