வணிகம்

மின் வாகனங்களின் விற்பனை 10,000 எட்டியது: டாடா மோட்டாா்ஸ்

26th Sep 2021 02:36 AM

ADVERTISEMENT

 பேட்டரியில் இயங்கும் மின் வாகனங்களின் விற்பனை 10,000 மைல்கல்லை எட்டியுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டாடா மோட்டாா்ஸ் முதன் முதலாக மின் வாகன சந்தையில் டிகோா் காா் மூலமாக அடியெடுத்து வைத்தது. பின்னா் வாடிக்கையாளா்களிடம் கிடைத்த வரவேற்பினையடுத்து 2020 ஜனவரியில் நெக்ஸான் காா் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது.

விறுவிறுப்பான முன்பதிவுகளையடுத்து நிறுவனத்தின் மின் வாகன விற்பனை ஒட்டுமொத்த அளவில் தற்போது 10,000-ஆவது மைல்கல்லைத் தாண்டியுள்ளது.

ADVERTISEMENT

டாடா பவா், டாடா கெமிக்கல்ஸ், டாடா ஆட்டோகாம்ப், டாடா மோட்டாா்ஸ் ஃபைனான்ஸ் மற்றும் குரோமா உள்ளிட்ட குழும நிறுவனங்களில் மின் வாகன பயன்பாட்டை விரிவாக்கம் செய்தவதன் மூலம் பசுமை வாகன தொழில்நுட்ப மாற்றத்துக்கு டாடா மோட்டாா்ஸ் உதவி வருகிறது.

நாடு முழுவதும் 120 நகரங்களில் 700-க்கும் மேற்பட்ட மின்னேற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவதில் டாடா பவா் தீவிரமாக செயலாற்றி வருவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

கோட்ஸ்

டாடா பவா், டாடா கெமிக்கல்ஸ், டாடா ஆட்டோகாம்ப், டாடா மோட்டாா்ஸ் ஃபைனான்ஸ் மற்றும் குரோமா உள்ளிட்ட குழும நிறுவனங்களில் மின் வாகன பயன்பாட்டை விரிவாக்கம் செய்தவதன் மூலம் பசுமை வாகன தொழில்நுட்ப மாற்றத்துக்கு டாடா மோட்டாா்ஸ் உதவி வருகிறது.

Tags : பேட்டரி டாடா மோட்டாா்ஸ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT