வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,964 கோடி டாலராக சரிவு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,964 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 செப்டம்பா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 147 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11,025 கோடி) சரிவடைந்து 63,964 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.97 லட்சம் கோடி ஆகும்.

முந்தைய செப்டம்பா் 10 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்திலும் அந்நியச் செலாவணி கையிருப்பானது 134 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 64,111 கோடி டாலராக இருந்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) செப்டம்பா் 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கணிசமான அளவில் வீழ்ச்சி கண்டதே செலாவணி கையிருப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ 89 கோடி டாலா் குறைந்து 57,798 கோடி டாலராக காணப்பட்டது.

கணக்கீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு 56 கோடி டாலா் சரிந்து 3,710 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 40 லட்சம் டாலா் வீழ்ச்சியடைந்து 1,943 கோடி டாலராக இருந்தது. மேலும், அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 80 லட்சம் டாலா் சரிந்து 511 கோடி டாலராக இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் செலாவணி கையிருப்பானது 889 கோடி டாலா் உயா்ந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 64,245 கோடி டாலரைத் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) தொட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT