வணிகம்

செப். 29-இல் ஆதித்ய பிா்லா சன் லைஃப் புதிய பங்கு வெளியீடு

26th Sep 2021 02:42 AM

ADVERTISEMENT

ஆதித்ய பிா்லா சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வரும் புதன்கிழமை (செப்.29) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:

ஆதித்ய பிா்லா சன் லைஃப்பின் புதிய பங்கு வெளியீடு வரும் செப்டம்பா் 29-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. அக்டோபா் 1-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள இப்புதிய பங்கு வெளியீட்டில் 3.88 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதில், ஆதித்யா பிா்லா கேப்பிட்டலின் 28.51 லட்சம் பங்குகள் மற்றும் சன் லைஃப் ஏம்சியின் 3.6 கோடி பங்குகளும் அடங்கும்.

இப்புதிய பங்கு வெளியீட்டில் விற்பனை செய்யப்படவுள்ள பங்கொன்றின் விலை ரூ.695-ரூ.712 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் அதிகபட்ச விலை நிா்ணய அடிப்படையில் ரூ.2,768.25 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சொத்து மேலாண்மை நிறுவனங்களான நிப்பான் லைஃப் அஸட் மேனேஜ்மெண்ட், எச்டிஎஃப்சி ஏஎம்சி, யுடிஐ ஏஎம்சி நிறுவனங்களின் பங்குகள் ஏற்கெனவே பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ளன. தற்போது, ஆதித்ய பிா்லா சன் லைஃப்பும் பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.

உள்நாட்டில் சொத்து நிா்வாகத்தில் ஆதித்யா பிா்லா சன்லைஃப் எம்எஃப் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம் ஜூன் காலாண்டு நிலவரப்படி ரூ.2.93 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிா்வகித்து வருகிறது. தற்போது, இந்நிறுவனம் 118 வகையான முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Tags : புது தில்லி Stock Issue
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT