வணிகம்

பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு: சென்செக்ஸ் 476 புள்ளிகள் ஏற்றம்

DIN

வாரத்தின் 3-வது வர்த்தக நாளான இன்று (செப்.15) வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 476 புள்ளிகளும், நிஃப்டி 139 புள்ளிகளும் உயர்ந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 476.11  புள்ளிகள் உயர்ந்து 58,723.20 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.82 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 139.45 புள்ளிகள் உயர்ந்து 17,519.45 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.80 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. 

அதிகபட்சமாக என்.டி.பி.சி. நிறுவனத்தின் பங்குகள் 7.16 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 4.53 சதவிகிதமும், டைட்டன் கம்பெனி 3.09 சதவிகிதமும், எச்.டி.எல். டெக் 2.86 சதவிகிதமும் உயர்ந்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT