வணிகம்

ஓப்போவின் முதல் வயர்லஸ் இயர்பட்ஸ் வெளியீடு

8th Sep 2021 04:15 PM

ADVERTISEMENT

 

ஓப்போ நிறுவனத்தின் முதல் வயர்லஸ் இயர்பட்ஸான ‘என்கோ பட்ஸ்’ புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த புதிய இயர்பட்ஸ் இந்திய சந்தைகளில் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இணைய விற்பனை நிறுவனமான ஃபிளிப்கார்ட், ரூ. 1,999 மதிப்பிலான ஓப்போ இயர்பட்ஸை ரூ. 1,799-க்கு தள்ளுபடி விலையில் தரவுள்ளது. இந்த தள்ளுபடியானது செப்டம்பர் 14 - 16 வரை 3 நாள்கள் இருக்கும்.

இயர்பட்ஸின் சிறப்பம்சங்களாக, 24 மணிநேரம் உபயோகிக்கும் வகையில் 400 எம்ஏஎச் பேட்டரி கேஸ், ஒவ்வொரு இயர்பட்ஸிலும் 40 எம்ஏஎச் சார்ஜ் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், 10 மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய செல்போனிலிருந்து ப்ளூடூத் மூலம் பகிர்ந்து இயர்பாட்ஸை உபயோகிக்க முடியும். இதற்காக ப்ளூடூத் சிப்செட் 5.2 தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைத்துள்ளனர். 

Tags : OPPO Earbuds OPPO Enco Buds
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT