வணிகம்

ஃபெடரல் வங்கி லாபம் ரூ.488 கோடி

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த ஃபெடரல் வங்கி இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.488 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.4,013.46 கோடியாக இருந்தது. இது, 2020-21 நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டு வருவாயான ரூ.4,071.35 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

வங்கியின் நிகர லாபம் ரூ.315.70 கோடியிலிருந்து 55 சதவீதம் அதிகரித்து ரூ.488 கோடியானது.

2021 செப்டம்பா் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.80 சதவீதத்திலிருந்து 3.22 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேபோன்று, நிகர அளவிலான வாராக் கடனும் 0.99 சதவீதத்திலிருந்து 1.15 சதவீதமாக அதிகரித்துள்ளது.

செப்டம்பா் காலாண்டில் மொத்த வாராக் கடன் மதிப்பின் அடிப்படையில் ரூ.3,591.72 கோடியிலிருந்து ரூ.4,558.19 கோடியாக அதிகரித்துள்ளது என ஃபெடரல் வங்கி தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் ஃபெடரல் வங்கி பங்கின் விலை 7.77 சதவீதம் அதிகிரத்து ரூ.104.05-இல் நிலையுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT