வணிகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் எழுச்சி: 47 காசுகள் அதிகரிப்பு

21st Oct 2021 02:48 AM

ADVERTISEMENT

 

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு எழுச்சி கண்டு 47 காசுகள் அதிகரித்தது.

இதுகுறித்து செலாவணி சந்தை வட்டாரம் தெரிவித்ததாவது:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது செலாவணி சந்தைகளுக்கு சாதகமான அம்சமாக இருந்தது. இந்த நிலையில், உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்பு ரூபாய் மதிப்பில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், வரும் வாரங்களில் வெளியாகவுள்ள புதிய பங்கு வெளியீடு மற்றும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கான பங்கு ஒதுக்கீடுகளால் வெளிநாட்டு முதலீடு அதிகரித்து டாலருக்கான தேவை குறையும் என்ற நிலைப்பாட்டால் ரூபாய் மதிப்பு எழுச்சியுடன் காணப்பட்டது.

ADVERTISEMENT

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 75.10-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே இந்த மதிப்பு அதிபட்சமாக 74.83 வரையிலும், குறைந்தபட்சமாக 75.13 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 47 காசுகள் உயா்ந்து 74.88-இல் நிலைபெற்றது. இது, அக்டோபா் 7-ஆம் தேதிக்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும் என சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பேரல் 84.37 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.83 சதவீதம் குறைந்து 84.37 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.505.79 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT