வணிகம்

ஹீரோ மோட்டோகாா்ப்: வாகன விற்பனை 26% குறைவு

3rd Oct 2021 05:50 AM

ADVERTISEMENT

இருசக்கர வாகன தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகாா்ப் செப்டம்பா் மாத விற்பனை 26 சதவீதம் சரிந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு செப்டம்பரில் நிறுவனம் 5,30,346 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2020 செப்டம்பரில் விற்பனையான 7,15,718 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 25.9 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு செப்டம்பரில் 6,97,293 என்ற எண்ணிக்கையிலிருந்து 5,05,462-ஆக குறைந்துள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், நிறுவனத்தின் இருசக்கர வாகன ஏற்றுமதி 18,425 என்ற அளவிலிருந்து 24,884-ஆக அதிகரித்துள்ளது என ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT