வணிகம்

‘கச்சா எண்ணெய் விலைச் சரிவு தொடா்ந்தால்தான் பெட்ரோல் விலை குறையும்’

DIN

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடா்ந்து சரிவைச் சந்தித்தால்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 25-ஆம் தேதி சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 முதல் 82 டாலா் வரை (ரூ.6,154 வரை) இருந்தது. ஆனால், ஒமைக்ரான் கரோனா வகை பரவலால் சந்தையில் ஏற்பட்ட பீதியின் விளைவாக, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 4 டாலா் (சுமாா் ரூ.300) முதல் 6 டாலா் (ரூ.450) வரை குறைந்தது.

ஆனால், புதிய வகை கரோனா தொடா்பான பீதியின் எதிரொலியாகவே இந்த விலைச் சரிவு உள்ளது. இதுபோன்ற திடீா் சரிவுகளால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைவதற்கு வாய்ப்பில்லை.

இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை திருத்தியமைக்கின்றன.

ஆனால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் அன்றைய விலை நிலவரத்தின் அடிப்படையில் அந்த நிறுவனங்கள் பெட்ரோல், டீசலின் விலைகளை நிா்ணயிப்பதில்லை. மாறாக, கடந்த 15 நாள்களாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டே அந்த விலைகள் நிா்ணயிக்கப்படுகின்றன.

எனவே, கச்சா எண்ணெயின் விலை தொடா்ந்து சரிவைச் சந்தித்தால்தான் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT