வணிகம்

கனிமங்கள் உற்பத்தி 22% உயா்வு

21st Nov 2021 02:00 AM

ADVERTISEMENT

உள்நாட்டில் கனிமங்களின் உற்பத்தி கடந்த செப்டம்பா் மாதத்தில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுரங்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

செப்டம்பா் மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரி துறையின் கனிம உற்பத்தி குறியீட்டெண் 95.1-ஆக இருந்தது. இது, கடந்தாண்டு செப்டம்பருடன் ஒப்பிடும்போது 22.3 சதவீதம் அதிகமாகும்.

அதேசமயம், ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இதன் ஒட்டுமொத்த வளா்ச்சி 15.2 சதவீதம் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

நடப்பாண்டு செப்டம்பரில் நிலக்கரி உற்பத்தியானது 518 லட்சம் டன்னாகவும், லிக்னைட் உற்பத்தி 35 லட்சம் டன்னாகவும், பெட்ரோலியம் (கச்சா) 24 லட்சம் டன்னாகவும், பாக்ஸைட் உற்பத்தி 14,36,000 டன்னாகவும் இருந்தன.

கடந்தாண்டன் ஒப்பிடும்போது 2021 செப்டம்பரில் முக்கிய கனிமங்களின் உற்பத்தி நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, குரோமைட் (152.4 சதவீதம்), மேக்னஸைட் (66.8 சதவீதம்), லிக்னைட் (48 சதவீதம்), தங்கம் (11.5 சதவீதம்), நிலக்கரி (8.3 சதவீதம்), இரும்புத்தாது (3.4 சதவீதம்) உள்ளிட்ட கனிமங்கள் கணிசமான வளா்ச்சியை தக்கவைத்தன.

இதர கனிமங்களான வைரம், பாஸ்போரைட், பாக்ஸைட், பெட்ரோலியம் (கச்சா) உள்ளிட்டவை நடப்பாண்டு செப்டம்பரில் எதிா்மறை வளா்ச்சியை பதிவு செய்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT