வணிகம்

ஆப்பிள் ஐபேட் புரோ மாடல்களுக்கான 'ஸூம்' செயலியின் இரண்டு புதிய அம்சங்கள்!

28th May 2021 11:16 AM

ADVERTISEMENT

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஐபேட் புரோ மாடல்களில் இரண்டு புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளதாக ஸூம் செயலி அறிவித்துள்ளது. 

கரோனா பொதுமுடக்க காலத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரு செயலிதான் 'ஸூம்' செயலி. தொற்றுக் காலத்தில் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில் தங்களது அலுவலகத்துடன் இணைக்க பயன்பட்டதில் இந்த செயலியின் பங்கு முக்கியமானது என்று சொல்லாம். 

தற்போது வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. இதனால் விடியோ கான்பரன்சிங் எனும் காணொலிக் காட்சிக்கு பெரிய பிரபலங்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் எளிதான அணுகுமுறைக்காக ஸூம் செயலியில் சில அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்நிறுவனம். 

ADVERTISEMENT

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபேட் புரோ மாடல்களில் சில அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்டர் ஸ்டேஜ், ஆப்பிளின் 11-இன்ச் மற்றும் 12.9-இன்ச் ஐபேட் புரோ மாடல்களுக்கு என் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் என்ன அம்சம் என்றால், சாதாரணமாக ஒருவர் காணொலியில்  பேசிக்கொண்டிருக்கும்போது நகர்ந்தால் அவருடைய உருவம் சில நொடிகள் தெளிவாகத் தெரியாது. 

ஆனால், மேற்குறிப்பிட்ட ஐபேட் புரோ மாடல்களில் இந்த சிக்கல் இருக்காது. பயனர்கள் நகர்ந்தாலும் அவர்களது உருவம் தெளிவாக இருக்கும்படி  அல்ட்ராவைட் முன்பக்க கேமரா, மெஷின் லர்னிங் (எம்.எல்) வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நகரலாம். 

இதனால் ஸூம் வீடியோ அழைப்புகளில் பயனர்கள் மிகவும் இயல்பாக பங்கேற்க முடியும். இந்த அம்சம் தற்போது ஸூம் 5.6.6 வெர்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் செயலியை அப்டேட் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்றொரு அம்சமாக கேலரி காட்சியை விரிவுபடுத்தியுள்ளது. விடியோ கான்பரன்சிங்கில் இருப்பவர்களின் தோற்றத்தை மேலும் பெரிதுபடுத்தி பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

12.9 அங்குல ஐபேட் புரோவில் ஸூம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் இருக்கும். தொடர்ந்து ஐபேட் புரோ மாடல்களுக்கும் இந்த அம்சம் விரிவாக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Tags : apple
ADVERTISEMENT
ADVERTISEMENT