வணிகம்

மி மிக்ஸ் ஃபோல்ட்: ஸியோமியின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்

31st Mar 2021 01:31 PM

ADVERTISEMENT


ஸியோமி நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோனை நேற்று அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு போட்டியாக மி மிக்ஸ் ஃபோல்டு ஸ்மார்ஃபோன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

8.1 இன்சு அளவுள்ள தொடுதிரையுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராஸஸர், 5020 மெஹாஹட்ஸ் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் டர்போசார்ஜிங் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் எடை மற்றும் பயன்பாட்டு முறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும்,இதுபோன்ற பிற மடிக்கும் வசதி கொண்ட செல்லிடப்பேசிகளின் எடையை விட 27 சதவீதம் இந்த செல்லிடப்பேசியின் எடை குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஸியோமி அறிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோன் ஸியோமியின் அதிகாரப்பூர்வ தளங்கள் வாயிலாக ஏப்ரல் 16 முதல் விற்பனைக்கு வருகிறது.
 

Tags : Xiaomi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT