வணிகம்

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்

25th Mar 2021 10:45 AM

ADVERTISEMENT

பங்குச்சந்தை வணிகம் இன்று (மார்ச் 25) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 447 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 447 புள்ளிகள் சரிந்து 48,685.65 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 1 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135 புள்ளிகள் சரிந்து 14,414.40 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.91 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 2 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் தொடங்கியது.

ADVERTISEMENT

மற்ற 28 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. அதிகபட்சமாக மாருதி சுசூகி 2.51 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 2.32 சதவிகிதமும், எஸ்.பி.ஐ. 1.85 சதவிகிதமும் சரிந்துள்ளது.

அதிகபட்சமாக லார்சன் & டர்போ பங்குகள் 0.86 சதவிகிதமும், ஓ.என்.ஜி.சி. பங்குகள் 0.53 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT