வணிகம்

சென்செக்ஸ் 700 புள்ளிகள், நிஃப்டி 200 புள்ளிகள் சரிவு

4th Mar 2021 11:01 AM

ADVERTISEMENT


பங்குச்சந்தை வணிகம் இன்று (மார்ச் 4) சரிவுடன் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் மேலும் சரிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 700 புள்ளிகளும், நிஃப்டி 200 புள்ளிகளும் சரிந்தன.  

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 742 புள்ளிகள் சரிந்து 50,839.35 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் 1.19 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 15,074 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 1.15 சதவிகிதம் சரிவாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT