வணிகம்

பங்குச்சந்தையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 280 புள்ளிகள் சரிந்தது

DIN

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 280 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 282.63 புள்ளிகள் சரிந்து 52,306.08 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.54 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85.80  புள்ளிகள் சரிந்து  15,686.95 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இதுவும் 0.54 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தர பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

அதிகபட்சமாக கோட்டாக் வங்கி பங்குகள் 1.32 சதவிகிதமும், எல் & டி 1.29 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 1.23 சதவிகிதமும், டிசிஎஸ் 1.17 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 0.97 சதவிகிதமும் சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT