வணிகம்

பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்: சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்வு

22nd Jun 2021 10:32 AM

ADVERTISEMENT

பங்குச்சந்தை வணிகம் இன்று (ஜூன் 22)  காலை உயர்வுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்செக்ஸ் 450 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450.94  புள்ளிகள் உயர்ந்து 53,025.40 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.91 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 139.50 புள்ளிகள் உய்ர்ந்து 15,886 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.92 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தர நிறுவனங்களின் பங்குகளில் 25 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 5  நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிந்துள்ளது.

ADVERTISEMENT

அதிகபட்சமாக மாருதி சுசூகி நிறூவனத்தின் பங்குகள் 4.09 சதவிகிதமும், எல்&டி 2.05 சதவிகிதமும், அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.56 சதவிகிதமும், ஐசிஐசிஐ வங்கி 1.42 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

Tags : Sensex Nifty
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT