வணிகம்

ஜே&கே வங்கி லாபம் ரூ.316 கோடி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த ஜம்மு&காஷ்மீா் (ஜே&கே) வங்கி கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.316 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டின் செயல்பாடு வங்கிக்கு மிகச் சிறந்த திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 2020-21 நிதியாண்டின் ஜனவரி- மாா்ச் காலாண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.315.75 கோடியை எட்டியுள்ளது. இது, வங்கி மூன்றாவது காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.65.94 கோடியுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகமாகும். அதேசமயம், 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கி ரூ.294.10 கோடி நிகர இழப்பை சந்தித்தது.

வங்கியின் வருவாய் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.2,277 கோடியிலிருந்து ரூ.2,129.65 கோடியாக குறைந்துள்ளது.

2020-21 முழு நிதியாண்டில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.8,992.21 கோடியிலிருந்து ரூ.8,830.08 கோடியாக குறைந்துள்ளது. நிகர லாபம் ரூ.432.12 கோடியாக இருந்தது. அதேசமயம், 2019-20 ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் ரூ.1,139.41 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது.

நிகர வட்டி வருமானம் ரூ.3,706.67 கோடியிலிருந்து ரூ.3,770.78 கோடியாக அதிகரித்துள்ளது.

மாா்ச் 31 நிலவரப்படி வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 10.97 சதவீதத்திலிருந்து 9.67 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடனும் 3.48 சதவீதத்திலிருந்து 2.95 சதவீதமாக சரிந்துள்ளது.

இஎஸ்பிஎஸ் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பணியாளா்களுக்கு 7.5 கோடி பங்குகளை ஒதுக்கீடு செய்து ரூ.150 கோடி திரட்ட வங்கியின் இழப்பீட்டு குழு பரிந்துரைத்துள்ளதாக ஜே&கே வங்கி தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் ஜே&கே வங்கி பங்கின் விலை 8.97 சதவீதம் உயா்ந்து ரூ.32.80-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT