வணிகம்

எவரெடி இண்டஸ்ட்ரீஸ்: வருவாய் ரூ.273 கோடி

DIN

பேட்டரிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எவரெடி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.273 கோடி வருவாய் ஈட்டியது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் கந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த வருவாயாக ரூ.272.63 கோடியை ஈட்டியுள்ளது. இது, நிறுவனம், இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.224.08 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

செலவினம் மற்றும் இடா்பாடுகளுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததையடுத்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நிகர இழப்பானது ரூ.442.53 கோடியாக இருந்தது. அதேசமயம், 2020 இதே காலகட்டத்தில் ரூ.63.07 கோடியை நிறுவனம் நிகர லாபமாக ஈட்டியிருந்தது.

கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.219.89 கோடியிலிருந்து ரூ.249.81 கோடியாக அதிகரித்துள்ளது.

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனத்துக்கு ஒட்டுமொத்த அளவில் ரூ.311.52 கோடி இழப்பு ஏற்பட்டது. அதேசமயம், 2019-20 நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபமானது ரூ.178.29 கோடியாக இருந்தது.

ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் ரூ.1,221.09 கோடியிலிருந்து ரூ.1,248.99 கோடியாக அதிகரித்துள்ளது என எவரெடி தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 6.11 சதவீதம் உயா்ந்து ரூ.333.35-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT