வணிகம்

பிளே ஸ்டேஷன் ஸ்டோரில் மீண்டும் சைபர்பங்க் 2077 விடியோ கேம்

DIN


பிளே ஸ்டேஷன் ஸ்டோரிலிருந்து சைபர்பங்க் 2077 கேம் நீக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்5-இல் மீண்டும் வரவுள்ளது.

சைபர்பங்க் 2077 விடியோ கேம் ஜூன் 21 முதல் பிளே ஸ்டேஷன் ஸ்டோரில் கிடைக்கும் என சிடி ப்ரோஜெக்ட் ரெட் கேமிங் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கேமில் தொடக்கத்தில் சில பக்குகள் போன்ற பிரச்னைகள் இருந்து வந்துள்ளன. பிஎஸ்4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் விளையாடுபவர்கள் நிறைய பேருக்கு இதே பிரச்னை இருந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சோனி இதை பிளே ஸ்டேஷன் ஸ்டோரிலிருந்து நீக்கியது. மேலும் பயனாளர்களுக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்தியது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் பணத்தைத் திரும்பச் செலுத்தியது. ஆனால், அதை நீக்குவதற்குப் பதில் எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் செயல்படுவது பற்றி எச்சரிக்கை மட்டுமே விடுத்தது.

சோனியை கேமிங் நிறுவனம் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, சைபர்பங்க் 2077 கேம் மீண்டும் பிளே ஸ்டேஷன் ஸ்டோருக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் பிறழ் சாட்சியம்

டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 போட்டித் தோ்வு: மாவட்ட மைய நூலகத்தில் மாதிரித் தோ்வு

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: கு. செல்வப்பெருந்தகை

பாமகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

கல்வி சந்தைப் பொருளாகி விட்டது: சீமான்

SCROLL FOR NEXT