வணிகம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு முதல் முறையாக 60,000 கோடி டாலரை தாண்டி சாதனை

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றில் முதல் முறையாக 60,000 கோடி டாலரைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூன் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 684 கோடி டாலா்

(இந்திய மதிப்பில் சுமாா் ரூ.51,000 கோடி) அதிகரித்து 60,500 கோடி டாலரை எட்டியுள்ளது. அந்நியச் செலாவணி 60,000 கோடி டாலா் மைல்கல்லைத் தாண்டியுள்ளது அதன் வரலாற்றில் இதுவே முதல் முறை.

முந்தைய மே 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 527 கோடி டாலா் அதிகரித்து 59,816 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே மே 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்து சாதனை படைத்துள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில், எஃப்சிஏ 736 கோடி டாலா் உயா்ந்து 59,816 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாறுபாடு ஏற்படுகிறது.

கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 50 கோடி டாலா் சரிவடைந்து 3,760 கோடி டாலராக இருந்தது.

அதேபோன்று, சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 10 லட்சம் டாலா் குறைந்து 151 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 1.6 கோடி டாலா் சரிந்து 500 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெளியான நிதிக் கொள்கை அறிவிப்பில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 60,000 கோடி டாலரை கடக்கும் விளிம்பில் உள்ளது. இது, சா்வதேச அளவில் எழும் சவால்களை சமாளிக்க பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கோ் ரேட்டிங் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணா் மதன் சப்நவீஸ் கூறுகையில்,‘ அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது சாதகமான அறிகுறிகளில் ஒன்று. இது, நாட்டின் வெளியுறவு இருப்பு நிலையை மிக பலமாக்க உதவிடும். தற்போதுள்ள செலாணி கையிருப்பு நம்நாடு 15-18 மாதங்களுக்கு இறக்குமதி செய்து கொள்ள போதுமானதாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT