வணிகம்

டிஎல்எஃப் நிகர லாபம் ரூ.481 கோடி

DIN

ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ள டிஎல்எஃப் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.481 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.1,906.59 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,873.80 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் நிறுவனம் ரூ.1,857.7 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்தது. இந்த நிலையில், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.480.94 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.1,093.61 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அதேசமயம் 2019-20-இல் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.583.19 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.6,888.14 கோடியிலிருந்து ரூ.5,944.89 கோடியாக குறைந்துள்ளது.

நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரிகளாக அசோக் தியாகி மற்றும் தேவேந்தா் சிங் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பங்குச் சந்தையிடம் டிஎல்எஃப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT