வணிகம்

கரோனாவிலும் புதிய ஸ்மார்ட்போன் வாங்க மக்களிடம் ஆர்வம்: ஆய்வு

28th Jul 2021 05:43 PM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் அதிக அளவிலான மக்களுக்கு புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த கண்டார் குழு என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. 

ஸ்மார்ட்போன்கள் குறித்தும் 5ஜி வரவேற்பு குறித்தும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகம் முழுவதும் மூன்றில் இருவர் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்த ஆறு மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 3 ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நோக்கியா

சீனாவில் 91 சதவிகிதத்தினர் 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுவே ஜப்பானில் 55 சதவிகிதத்தினர் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர். 

அமெரிக்காவில் 74 சதவிகிதத்தினரும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். 

கரோனாவால் கடைகள் மூடப்பட்டிருந்தாலும், தற்போது பெரும்பாலான நாடுகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால், சந்தைகளை நோக்கிய மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | 'நான் ஜோதிடர் அல்ல': மம்தா

லண்டனில் இரண்டாம் காலாண்டில் மின்னணு சந்தைகளில் விற்பனை விகிதம் அதிகரித்துள்ளது. இது முதல் காலாண்டை ஒப்பிடுகையில் 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 7 சதவிகிதமும், ஜெர்மனியில் 4 சதவிகிதமும், ஸ்பெயினில் 3 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. 

கடைகளுக்கு சென்று ஸ்மார்ட்போன்களை வாங்குவோரின் 80 சதவிகிதத்தினர் தங்களது ஸ்மார்ட்போன்களை நீண்ட காலம் பயன்படுத்தவே விரும்புகின்றனர். எனினும் அவர்கள் புதுப்புது அப்டேட்களை எதிர்பார்ப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 

Tags : technology coronavirus smartphones
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT