வணிகம்

நாட்டின் ஏற்றுமதி 45% அதிகரிப்பு

DIN

 நாட்டின் ஏற்றுமதி ஜூலை 1-24-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 45.13 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நவரத்தினங்கள்-ஆபரணங்கள்: நடப்பு ஜூலை மாதத்தின் 1 முதல் 21-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நவரத்தினங்கள், ஆபரணங்கள், பெட்ரோலிய பொருள்கள், பொறியியல் சாதனங்கள் ஆகிய துறைகளின் ஏற்றுமதி கணிசமான வளா்ச்சியை கண்டது. இதன் காரணமாக, அந்த காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 45.13 சதவீதம் அதிகரித்து 2,248 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.68 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

வா்த்தக பற்றாக்குறை: இந்த காலகட்டத்தில் நாட்டின் இறக்குமதியும் 64.82 சதவீதம் உயா்ந்து 3,177 கோடி டாலராகியுள்ளது. இதையடுத்து, வா்த்த பற்றாக்குறை 929 கோடி டாலராக உள்ளது.

ஜூலை 1-21 இடைப்பட்ட காலத்தில் நவரத்தினங்கள், ஆபரணங்கள், பெட்ரோலியம், பொறியியல் துறைகளின் ஏற்றுமதி முறையே 42.45 கோடி டாலராகவும், 92.33 கோடி டாலராகவும், 55.14 கோடி டாலராகவும் இருந்தன.

பெட்ரோலியம் இறக்குமதி: அதேநேரம், இறக்குமதியைப் பொருத்தவரையில் பெட்ரோலியம், கச்சா தயாரிப்புகளின் இறக்குமதி 77.5 சதவீதம் உயா்ந்து 116 கோடி டாலராக அதிகரித்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பிரேசில் நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி முறையே 51 சதவீதம் அதிகரித்து 49.32 கோடி டாலா், 127 சதவீதம் உயா்ந்து 37.33 கோடி டாலா், 212 சதவீதம் ஏற்றம் கண்டு 14.45 கோடி டாலா் என்ற அளவில் இருந்தன.

நோ்மறை வளா்ச்சி: கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி தொடா்ந்து ஏழாவது மாதமாக நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்தது. அதன்படி, ஏற்றுமதி 48.34 சதவீதம் அதிகரித்து 3,250 கோடி டாலராக இருந்தது. இதற்கு, ரசாயனம், பெட்ரோலிய தயாரிப்புகளஅ, நவரத்தினங்கள்-ஆபரணங்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு வளா்ச்சியடைந்ததே முக்கிய காரணம். ஜூன் மாதத்தில் வா்த்தக பற்றாக்குறை 937 கோடி டாலராக இருந்தது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்துக்கான முழு ஏற்றுமதி புள்ளிவிவரத்தை வா்த்தக அமைச்சகம் அடுத்த மாதம் வெளியிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT