வணிகம்

பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு: சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

19th Jul 2021 04:41 PM

ADVERTISEMENT

வாரத்தில் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 580 புள்ளிகள் வரை சரிந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 586.66 புள்ளிகள் சரிந்து 52,553.40 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் 1.10 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 171 புள்ளிகள் சரிந்து 15,752.40 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.07 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் வெறும் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.

ADVERTISEMENT

எஞ்சிய 26 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக எச்டிஎப்சி வங்கி 3.34 சதவிகிதமும், இந்தஸ்இண்ட் வங்கி 2.75 சதவிகிதம், எச்டிஎப்சி 2.15 சதவிகிதமும், ஆக்ஸிஸ் வங்கி 2.07 சதவிகிதமும் சரிந்து காணப்பட்டன.  

ADVERTISEMENT
ADVERTISEMENT