வணிகம்

மேக்புக் மூலமாக ஆப்பிள் சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி

7th Jan 2021 02:00 PM

ADVERTISEMENT

வரவிருக்கும் ஆப்பிள் மேக்புக் மூலமாக ஆப்பிள் சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்டு வரப்படவுள்ளது.

ஆப்பிள் இருவழி சார்ஜிங் திறனுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இதன்படி, ஆப்பிள் பயனர்கள் தங்கள் ஐபோன், ஐபேடு, ஏர்போட்கள் அல்லது ஆப்பிள் வாட்சை ஒரே நேரத்தில் மேக்புக் வழியாக சார்ஜ் செய்ய முடியும். ஐபேடுகள் மற்றும் ஐபோன்களின் வரைபடங்களையும் இது உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, மேக்புக்கும், ஐபேடும் அலுமினியமின்றி தயாரிக்கப்படுவதால் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கு பொருந்தாது.

சிலிக்கான் எம் 1 மேக்ஸை அறிமுகப்படுத்திய பின்னர், அடுத்த ஆண்டு புதிய மேக் சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். இது மேம்படுத்தப்பட்ட எம் 2 ஆப்பிள் சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்படும் என்று தெரிகிறது. 

ADVERTISEMENT

ஆப்பிள் 5 என்எம் செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எம் 2 சிப்செட் மற்றும் அதே சிப்செட்டால் இயங்கும் புதிய மேக்புக் ப்ரோ 13 இன்ச் மற்றும் மேக்புக் ப்ரோ 16 இன்ச் ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : apple
ADVERTISEMENT
ADVERTISEMENT