வணிகம்

இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம் 02

2nd Jan 2021 04:34 PM

ADVERTISEMENT

சாம்சங் நிறுவனத்தின் மலிவு விலை ஸ்மார்ட்போனான சாம்சங் எம்02 அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சாம்சங் நிறுவனத்தின் முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டின் முதல் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எம்02 இந்திய பயனர்களிடையே கிளப்பியுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5 இன்ச் திரை அளவைக் கொண்டுள்ள இந்த வகை ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக இருக்கும். ஸ்னாப்டிராகன் 450 செயலி மூலம் இயக்கப்படும் இது 32 ஜிபி மற்றும் 64 ஜிபி ஆகிய இரண்டு நினைவகங்களில் வெளியாகிறது. ரூ.10,000 த்துக்கும் குறைவான விலையில் சந்தைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் பயனர்களின் விரும்பமான ஒன்றாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

4 ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.10,000 க்கு குறைவாக விலை நிர்ணயிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ஆகிய இருவகை ரேம் வசதிகளுடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் பயனர்களின் விருப்பங்களை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சாம்சங் நிறுவனத்தின் “எம்” தொடர் ஸ்மார்ட்போன்கள் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட சாம்சங் நிறுவனமானது 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 1.5 கோடி 'எம்' தொடர் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்தது.

Tags : Samsung M02
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT