வணிகம்

பவுன் தங்கம் மீண்டும் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது

20th Feb 2021 10:41 AM

ADVERTISEMENT

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் 35 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.35,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த 2 நாள்களாக விலை குறைந்து வந்தது. எனினும் இன்று (பிப்.20) தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை விலை ரூ.35 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ,ரூ.35,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயர்ந்து, ரூ.4,376 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, ரூ.73.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.73,800 ஆகவும் விற்பனையாகிறது.

ADVERTISEMENT

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,376

1 பவுன் தங்கம்...............................35,008

1 கிராம் வெள்ளி.............................73.80

1 கிலோ வெள்ளி............................73,800

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,385

1 பவுன் தங்கம்...............................35,080

1 கிராம் வெள்ளி.............................74.00

1 கிலோ வெள்ளி.............................74,000

Tags : தங்கம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT