வணிகம்

10 கோடி பயனர்களைக் கொண்டுள்ள ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்

13th Feb 2021 04:55 PM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பயனர்களாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நெயில் சைபார்ட், ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் குறித்த பகுப்பாய்வுகளை நடத்தி வருகிறது.

அதன் ஆய்வின் படி, உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்திற்குள் இந்த 10 கோடி பயனர்கள் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதில் 30 கோடி பயனர்கள் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டுமே கிடைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இது கடந்த 2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் கிடைத்த பயனர்களை விட 2020-ல் கிடைத்த பயனர்கள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐ-போன், ஐ-பாட், மேக் ஆகியவற்றிற்கு பிறகு ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் ஐ-போன் பயன்படுத்துபவர்களில் 35 சதவிகிதத்தினர் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சையும் சேர்த்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஸ்மார்ட் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்துபவர்களில் 55 சதவிகிதத்தினர் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பயனர்களாகவே உள்ளதாக ஸ்டாடிஸ்டா ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் 13.9 சதவிகித பயனர்களைக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT