வணிகம்

2 நாள்கள் வீழ்ச்சியிலிருந்து மீண்ட பங்குச்சந்தை

11th Feb 2021 04:56 PM

ADVERTISEMENT

பங்குச்சந்தை வணிக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது. காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்வுடன் முடிவடைந்தது.

ரிலையன்ஸ் மற்றும் உலோக விற்பனைத் துறை பங்குகள் பங்குச்சந்தை எழுச்சியுடன் முடிவடைய காரணமாக அமைந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய (பிப். 11) மாலை வர்த்தக நேர முடிவில் 222.13 புள்ளிகள் உயர்ந்து 51,531.52 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் 0.43 சதவிகிதமாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 66.80  புள்ளிகள் உயர்ந்து 15,173.30 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.44 சதவிகிதம் உயர்வாகும்.

ADVERTISEMENT

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் தர 30 நிறுவனங்களின் பங்குகளில் 15 நிறுவனங்களில் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனம் 4.07 சதவிகிதமும், சன் பார்மா 2.62 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.60 சதவிகிதம், பவர் கிரிட் 1.59 சதவிகிதமும் உயர்ந்தன.

Tags : சென்செக்ஸ் வர்த்தகம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT