வணிகம்

ஆடியோ செயலியின் பக்கம் கவனத்தைத் திருப்பும் முகநூல் நிறுவனம்

11th Feb 2021 04:49 PM

ADVERTISEMENT

பிரபல சமூக வலைதள நிறுவனமான முகநூல் தற்போது ஆடியோ செயலி உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் சமூக வலைதளமாக முகநூல் உள்ளது. மிகச்சிறிய காலத்தில் வேகமாக தனது வளர்ச்சியை அடைந்த அந்த நிறுவனம் வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளையும் கைப்பற்றி இயங்கி வருகிறது.

இந்நிலையில் ஆடியோ வடிவிலான செயலி உருவாக்கத்தின் பக்கம் முகநூல் நிறுவனம் தனது கவனத்தை திருப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து கிளப்ஹவுஸ் போன்ற ஆடியோ உரையாடல் செயலியை உருவாக்கும் முயற்சியில் முகநூல் நிறுவனம் இறங்கியுள்ளது.

"நாங்கள் பல ஆண்டுகளாக ஆடியோ மற்றும் வீடியோ தொழில்நுட்பங்கள் மூலம் மக்களை இணைத்து வருகிறோம். இவற்றுடனான மக்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை எப்போதும் ஆராய்ந்து வருகிறோம் என முகநூல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Facebook
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT