பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த மூன்று நாள்களாக உயர்வுடன் தொடங்கிய நிலையில், இன்று சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிந்து 50,086.09 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.34 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33.20 புள்ளிகள் உயர்ந்து 14,756.75 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.25 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் நேற்று 23 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று 14 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்படுகின்றன.
அதிகபட்சமாக இந்துஸ் இன்ட் 2.37 சதவிகிதமும், டைட்டன் 2.06 சதவிகிதமும், ஐசிஐசிஐ வங்கி 1.96 சதவிகிதமும், ஆக்ஸிஸ் வங்கி 1.65 சதவிகிதமும் சரிவை சந்தித்துள்ளது.