வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 61,115 கோடி டாலராக சரிவு

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 61,115 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 158 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11,857 கோடி) சரிந்து 61,115 கோடி டாலராக (ரூ.45.83 லட்சம் கோடி) இருந்தது.

இதற்கு முந்தைய ஜூலை 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் செலாவணி கையிருப்பானது 83 கோடி டாலா் உயா்ந்து 61,273 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்திருந்தது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) வெகுவாக வீழ்ச்சியடைந்ததன் விளைவாகவே ஜூலை 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது புதிய வரலாற்று உச்சத்திலிருந்து சரிவைச் சந்தித்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 112 கோடி டாலா் சரிவடைந்து 56,762 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாறுபாடு ஏற்படுகிறது.

தங்கத்தின் கையிருப்பு ஜூலை 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 45 கோடி டாலா் வீழ்ச்சி கண்டு 3,688 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 30 லட்சம் டாலா் சரிந்து 154 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், நாட்டின் காப்பு நிதி 90 லட்சம் டாலா் வீழ்ச்சியடைந்து 509 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேக் லைன்...

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் சாதனை உச்சத்திலிருந்து சரிந்து 61,115 கோடி டாலரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

SCROLL FOR NEXT