வணிகம்

ட்விட்டர் முகப்புப் பக்கத்தில் கரோனா குறித்த தகவல்கள்!

27th Apr 2021 02:07 PM

ADVERTISEMENT

 

பிரபல சமூக ஊடகமான ட்விட்டரில் பயனர்கள், கரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களைப் பெறும் வசதியை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ட்விட்டர் பயனர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள கரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களைப் பெற முகப்புப் பக்கத்தில் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ட்விட்டர் கணக்கின் முகப்புப் பக்கத்தில் இந்த தகவல்களைப் பெறலாம். 

ADVERTISEMENT

இந்தியாவில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக இணையதளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி தற்போதைய கரோனா நிலவரம், கரோனா தடுப்பூசி உள்ளிட்ட தகவல்களைப் பெறலாம்.

தடுப்பூசி பாதுகாப்பு, செயல்திறன், பொது சுகாதார நிபுணர்களின் செய்திகள் இங்கு இருக்கும் என்றும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்கள் அதுதொடர்பான முழு தகவல்களையும் பெற இது உதவும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

மேலும், உலக சுகாதார அமைப்பு(WHO), அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) உள்ளிட்ட அமைப்புகளின் இணைக்கப்பட்டுள்ளன.  

முகநூலிலும் கரோனா சிகிச்சை, தடுப்பூசி குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT